ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்.
ollum vakaiyAna aRavinai OvAtEsellumvAy ellAnj seyal
Sharanya Srinivas
பொருள் / உரை
முருகா எளிய உரை
இயன்ற வழிகளில் அறம் செய்வோமே!ஒருபோதும் இடைவிடாமல் செய்வோமே!நாம் வாய்ப்புள்ள இடமெல்லாம் தேடுவோமே!நன்மை தரும் அறச்செயலைச் செய்வோமே!
• ஒல்லும் வகையான் = தமக்கு இயன்ற வழிகளிலெல்லாம் (மனம், சொல், செயல் ஆகியவற்றால்),• அறவினை = நன்மையான அறச் செயல்களை• ஓவாதே = ஒருபோதும் இடைவிடாமல்,• செல்லும்வாய் எல்லாம் = வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் எல்லாம்• செயல் = தவறாமல் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
மு.வரதராசன்
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
பரிமேலழகர்
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
Meaning in English
To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive





