Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 32

அறத்துப்பால்பாயிரவியல்4. அறன்வலியுறுத்தல்

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.

aRattinUung kAkkamum illai atanaimaRattalin Ungkillai kETu

Krishnaraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறம் செய்தலின் மேலாம் ஆக்கம் இல்லையே!என்றும் அதனின் மேலாம் நன்மை இல்லையே!மறத்தலினும் மேலாம் கேடும் இல்லையே!என்றும் அதனின் மேலாம் தீமை இல்லையே!

• அறத்தின் ஊங்கு = அறநெறியைக் கடைப்பிடிப்பதைக் காட்டிலும்• ஆக்கமும் இல்லை = மனிதனுக்கு மேலான நன்மையும் வளர்ச்சியும் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை;• அதனை மறத்தலின் ஊங்கு = அந்த அறநெறியை அலட்சியமாக மறந்து வாழ்வதைக் காட்டிலும்• கேடு இல்லை = மனிதனுக்குப் பெரிய அழிவும் நஷ்டமும் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.

மு.வரதராசன்

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

பரிமேலழகர்

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

Meaning in English

No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout