Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 31

அறத்துப்பால்பாயிரவியல்4. அறன்வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.

siRappInum selvamum Inum aRattinUungkuAkkam evanO uyirkku

Shuba Rajesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறம் ஒருவர்க்கு உயர் புகழ் தரும்!அறம் ஒருவர்க்குச் செல்வத்தையும் தரும்!அதற்கு மேலாய் ஆக்கம் ஒன்றும் இல்லையே!அறத்தை விஞ்சும் வேறு ஆக்கம் இல்லையே!

• சிறப்பு ஈனும் = மனிதர்களுக்கு மேலான புகழையும் வீட்டுலகப் பேரின்பத்தையும் தரும்;• செல்வமும் ஈனும் = அழியாத நன்மையான உலகச் செல்வத்தையும் தரும்;• உயிர்க்கு = மனித உயிர்களுக்கு• அறத்தின் ஊங்கு = அந்த அறநெறியைக் காட்டிலும்• ஆக்கம் எவனோ = மேலான நன்மையும் வளர்ச்சியும் தரக்கூடியது வேறு எதுவுமில்லை.

மு.வரதராசன்

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

பரிமேலழகர்

சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

Meaning in English

It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout