அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.
antaNar enpOr aRavOrmaR RevvuyirkkumsentaNmai pUNTozhuka lAn
SPR Prime Media
பொருள் / உரை
முருகா எளிய உரை
எவ்வுயிர்க்கும் குளிர்ந்த அருள் காட்டுவார்!என்றென்றும் அதுவே விரதமாய்க் கொள்வார்!அறவழி தவறா அச்சான்றோர் ஆவார்!அந்தணர் என்றே இவ்வுலகம் போற்றுவார்!
• எவ்வுயிர்க்கும் = உலகில் உள்ள அனைத்து உயிர்களிடத்திலும்• செந்தண்மை பூண்டு ஒழுகலான் = செம்மையான குளிர்ந்த கருணையையும் பேரருளையும் தம் வாழ்வின் விரதமாகக் கொண்டு வாழ்வதால்,• அறவோர் = அறநெறியில் வாழும் சான்றோர்களே• அந்தணர் என்போர் = 'அந்தணர்' (அழகிய தட்பமான அருளுடையவர்) என்று போற்றப்படுவோர் ஆவர்.
மு.வரதராசன்
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
பரிமேலழகர்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
Meaning in English
Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give





