Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 29

அறத்துப்பால்பாயிரவியல்3. நீத்தார் பெருமை

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.

kuNamennung kunRERi ninRAr vekuLikaNamEyung kAttal aritu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

குணமென்னும் குன்றேறி நின்ற முனிவர்!நீதியான கோபம் மிகக் கொண்ட அவர்!அக்கணப் பொழுதே அது நீடித்தாலும்!தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல் அரிதாகும்!

• குணம் என்னும் குன்று ஏறி நின்றார் = நற்குணங்கள் நிறைந்த மலையுச்சியில் வீற்றிருக்கும் தவமுனிவர்களின்• வெகுளி = நியாயமான கோபத்தை,• கணமேயும் = அது ஒரு கணப் பொழுதே நீடிப்பதாக இருந்தாலும்,• காத்தல் அரிது = அதனால் தண்டிக்கப்படுபவர்களால் தங்களைத் தற்காத்துக் கொள்வது இயலாததாகும்.

மு.வரதராசன்

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

பரிமேலழகர்

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

Meaning in English

The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout