Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 28

அறத்துப்பால்பாயிரவியல்3. நீத்தார் பெருமை

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.

niRaimozhi mAntar perumai nilattumaRaimozhi kATTi viTum

Krishh

பொருள் / உரை

முருகா எளிய உரை

வாய்மை என்றுமே தவறாச் சொல்லுடையோர்!வையகத்தில் மாபெரும் ஆற்றலுடையோர்!அவர் அருளிய மந்திர மொழிகள்!உலகிற்குக் காட்டிடும் அப்பெருமைகள்!

• நிறைமொழி மாந்தர் = பயன் நிறைந்த வாக்குப் பலிதம் உடைய மேன்மக்களின்• பெருமை = மாபெரும் பெருமையையும் ஆற்றலையும்,• நிலத்து = இந்த பூவுலகத்தில்• மறைமொழி = அவர்கள் அருளிய அருள்வாக்குகளும், புனித மந்திரச் சொற்களுமே• காட்டி விடும் = உலகிற்குத் தெளிவாக வெளிக்காட்டிவிடும்.

மு.வரதராசன்

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

பரிமேலழகர்

நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.)

சாலமன் பாப்பையா

நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

Meaning in English

The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout