Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 336

அறத்துப்பால்துறவறவியல்34. நிலையாமை

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.

neruna luLanoruvan inRillai ennumperumai yuTaittiv vulaku

Thriyambika Gopinath

பொருள் / உரை

முருகா எளிய உரை

நேற்று கம்பீரமாக உயிரோடு இருந்த ஒருவன், இன்றைக்கு உயிரோடு இல்லை என்று சொல்லும்படியான அதிவேக நிலையாமையைத் தன் இயல்பான தன்மையாகக் கொண்டுள்ளது இந்த உலகம் (எனவே கர்வம் கொள்ளாமல் அறம் செய்க).

• நெருநல் ஒருவன் உளன் = நேற்று கம்பீரமாக உயிரோடு வாழ்ந்த ஒரு மனிதன்,• இன்று இல்லை என்னும் = இன்றைக்கு உயிரோடு இல்லை, இறந்துவிட்டான் என்று சொல்லும்படியான• பெருமை உடைத்து = நிலையாமை என்னும் அசைக்க முடியாத வியக்கத்தக்க பண்பை• இவ் உலகு = இந்த பூவுலகம் தன்னகத்தே கொண்டுள்ளது.

மு.வரதராசன்

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

பரிமேலழகர்

ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

Meaning in English

Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory world

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout