Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 335

அறத்துப்பால்துறவறவியல்34. நிலையாமை

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்

nAsseRRu vikkuLmEl vArAmun nalvinaimERsenRu seyyAp paTum

Aarthi MN Ashwin

பொருள் / உரை

முருகா எளிய உரை

மரண வேளையில் பேச முடியாமல் நாக்கு அடைபட்டு இறுதி விக்கல் தொண்டையில் தோன்றுவதற்கு முன்பாகவே, உயிருள்ள இப்போதே நற்கதி தரும் நற்செயல்களை விரைந்து சென்று செய்துவிட வேண்டும்.

• நாச் செற்று = பேச முடியாதவாறு நாவை அடக்கி• விக்குள் மேல் வாராமுன் = மரண அவஸ்தையின் இறுதி விக்கல் தொண்டையில் மேலெழுந்து வருவதற்கு முன்பாகவே,• நல்வினை = ஆன்மாவிற்கு நற்கதி தரும் நல்ல அறச்செயல்களை• மேற்சென்று செய்யப்படும் = ஆர்வத்தோடு விரைந்து சென்று அப்போதே செய்ய வேண்டும்.

மு.வரதராசன்

நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

பரிமேலழகர்

நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

Meaning in English

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of death

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout