Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 333

அறத்துப்பால்துறவறவியல்34. நிலையாமை

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.

aRkA iyalpiRRus selvam atupeRRAlaRkupa AngkE seyal

Rajhesh Vaidhya

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• செல்வம் = இவ்வுலகில் நாம் சேர்க்கும் செல்வமானது• அற்கா இயல்பிற்று = ஒருபோதும் ஒருவரிடமும் நிலைத்து நிற்காத அழியக்கூடிய இயல்புடையதாகும்;• அது பெற்றால் = அந்தச் செல்வம் ஒருவனுக்குக் கைகூடி வரும்போதே,• அற்குப = நிலைத்து நிற்கக்கூடிய அறச்செயல்களை, தர்மங்களை• ஆங்கே செயல் = அப்போதே சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகச் செய்துவிட வேண்டும்.எளிய விளக்கம்:செல்வம் என்பது ஒருவரிடமும் நிலைத்து நிற்காத இயல்புடையது; எனவே அச்செல்வம் கையில் இருக்கும்போதே, சிறிதும் தாமதிக்காமல் உடனே நிலைத்து நிற்கக்கூடிய அறச்செயல்களையும் தர்மங்களையும் செய்துவிட வேண்டும்.

மு.வரதராசன்

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

பரிமேலழகர்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடைத்துச் செல்வம், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க. ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

Meaning in English

Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout