Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 332

அறத்துப்பால்துறவறவியல்34. நிலையாமை

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று.

kUttAT TavaikkuzhAt taRRE perunjselvampOkkum aruviLin taRRu

Devi Godavarma

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவனிடம் செல்வம் சேர்வது நாடக அரங்கில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுவது போன்றது; அச்செல்வம் அழிந்துபோவது நாடகம் முடிந்ததும் அந்தக் கூட்டம் ஒரே நொடியில் முற்றிலுமாக கலைந்து போவது போன்றதாகும்.

• பெருஞ்செல்வம் = ஒருவனிடம் பெரிய செல்வம் வந்து சேருவது• கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே = கூத்து நடக்கும் நாடக அரங்கிற்கு மக்கள் சிறுகச் சிறுகக் கூட்டம் கூடுவதைப் போன்றதாகும்;• போக்கும் = அந்தச் செல்வம் ஒருவனை விட்டு நீங்கி அழிந்து போவதோ• அது விளிந்து அற்று = நாடகம் முடிந்தவுடன் கூடி நின்ற மக்கள் கூட்டம் ஒரே நொடியில் கலைந்து போவதைப் போன்றதாகும்.

மு.வரதராசன்

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

பரிமேலழகர்

பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.)

சாலமன் பாப்பையா

நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

Meaning in English

As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout