கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.
kolaivinaiya rAkiya mAkkaL pulaivinaiyarpunmai terivA rakattu
Sreenidhi Ram
பொருள் / உரை
முருகா எளிய உரை
உயிர்களைக் கொல்வதையே தொழிலாகவும் பழக்கமாகவும் கொண்டு வாழ்பவர்கள், கொலையின் இழிவை உணர்ந்த சான்றோர்களின் பார்வையில் மிக மிகக் கீழான இழிசெயல் புரிபவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
• கொலை வினையர் ஆகிய மாக்கள் = உயிர்களைக் கொன்று அழிக்கும் தொழிலை அல்லது வழக்கத்தைக் கொண்டுள்ள மனிதர்கள்,• புன்மை தெரிவார் அகத்து = கொலைத்தொழிலின் இழிவையும் கீழான தன்மையையும் உணர்ந்த சான்றோர்களின் உள்ளத்தில்• புலை வினையர் = மிக மிகக் கீழான இழிசெயல் செய்பவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
மு.வரதராசன்
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
பரிமேலழகர்
கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர். (கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.
Meaning in English
Whose trade is 'killing', always vile they show, To minds of them who what is vileness know





