Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 327

அறத்துப்பால்துறவறவியல்33. கொல்லாமை

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினை.

tannuyir nIppinunj seyyaRka tAnpiRitinnuyir nIkkum vinai

Shruti Jagan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• தன் உயிர் நீப்பினும் = ஓர் உயிரைக் காப்பாற்றுவதால் தன் சொந்த உடம்பின் உயிரே போகக்கூடிய நிலை வந்தாலும்,• தான் = ஒருவன் தன் கையால்• பிறிது இன் உயிர் = மற்றொரு இனிய அப்பாவி உயிரின் வாழ்நாளை• நீக்கும் வினை = உடலிலிருந்து பறித்துக் கொல்லும் பாவச் செயலை• செய்யற்க = எக்காலத்தும் செய்யக் கூடாது.எளிய விளக்கம்:தன் சொந்த உயிரே போகக்கூடிய நெருக்கடியான நிலை வந்தாலும் கூட, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மற்றொரு இனிய உயிரைக் கொல்லும் பாவச் செயலை ஒருவன் ஒருபோதும் செய்யக் கூடாது.

மு.வரதராசன்

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

பரிமேலழகர்

தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க. ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.)

சாலமன் பாப்பையா

தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.

Meaning in English

Though thine own life for that spared life the price must pay, Take not from aught that lives gift of sweet life away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout