Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 326

அறத்துப்பால்துறவறவியல்33. கொல்லாமை

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று.

kollAmai mERkoN TozhukuvAn vAzhnALmElsellA tuyiruNNung kURRu

Ashok Ramamoorthy

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஓர் உயிரையும் கொல்லாத அகிம்சையைத் தன் தலையாய விரதமாகக் கொண்டு வாழ்பவனின் ஆயுளின் மீது, உயிரைப் பறிக்கும் எமதர்மன் கூடக் குறுக்கிட்டு அகால மரணத்தை உண்டாக்க மாட்டான்.

• கொல்லாமை = எந்தவொரு உயிரையும் கொல்லாத அகிம்சை நெறியை• மேற்கொண்டு ஒழுகுவான் = தன் வாழ்நாளின் முக்கிய விரதமாக ஏற்று வாழ்கின்றவனின்• வாழ்நாள் மேல் = ஆயுட்காலத்தின் மீது• உயிர் உண்ணும் கூற்று = உயிர்களைப் பறித்து உண்ணும் எமதர்மன் (மரண பயம்)• செல்லாது = அகால மரணத்தைக் கொண்டுவந்து அண்டமாட்டான்.

மு.வரதராசன்

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

பரிமேலழகர்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

Meaning in English

Ev'n death that life devours, their happy days shall spare, Who law, 'Thou shall not kill', uphold with reverent care

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout