நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.
nallA RenappaTuva tiyAtenin yAtonRungkollAmai sUzhum neRi
Vaishaly Yogarajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
நற்கதி தரும் நல்ல வழி எதுவென்றால், எந்தவொரு சிறிய உயிரையும் கொல்லாமல் எப்போதும் விழிப்புணர்வோடு பாதுகாக்கும் அகிம்சை நெறியே ஆகும்.
• நல் ஆறு எனப்படுவது = நற்கதிக்கும் மேலான வாழ்விற்கும் உரிய நல்ல நல்வழி எதுவென்று• யாது எனின் = ஆராய்ந்து பார்த்தால்,• யாது ஒன்றும் = எந்தவொரு சிறிய உயிரையும்• கொல்லாமை = கொல்லாமல் காக்க வேண்டும் என்று• சூழும் நெறி = எப்போதும் எண்ணிச் சிந்தித்து வாழும் அகிம்சை நெறியே ஆகும்.
மு.வரதராசன்
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
பரிமேலழகர்
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
Meaning in English
You ask, What is the good and perfect way? 'Tis path of him who studies nought to slay





