பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும்.
piRarkkinnA muRpakal seyyin tamakkinnApiRpakal tAmE varum
Lakshanyaa Nithikaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவன் பிறருக்குத் துன்பத்தை முற்பகலில் செய்தால், அந்தத் துன்பமானது அவனுக்கே பிற்பகலில் எவரும் செய்யாமலேயே தானாகத் தேடிவந்து தாக்கும் (ஆகவே பிறருக்குத் தீங்கு செய்யக் கூடாது).
• பிறர்க்கு இன்னா = பிற மனிதர்களுக்கோ உயிர்களுக்கோ ஒருவன் துன்பத்தை• முற்பகல் செய்யின் = நாளின் முற்பகுதியில் (அல்லது வாழ்வின் தொடக்கத்தில்) செய்வானானால்,• தமக்கு இன்னா = அவனுக்குரிய பேரழிவும் பெருந்துன்பமும்• பிற்பகல் = நாளின் பிற்பகுதியிலேயே (அல்லது வாழ்வின் முடிவிலேயே)• தாமே வரும் = எவரும் செய்யாமலேயே தானாகத் தேடிவந்து தாக்கும்.
மு.வரதராசன்
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
பரிமேலழகர்
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் - துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் - தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும். ('முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின், அங்ஙனம் கடிதினும் எளிதினும் வரும். அதனால், அவை செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின் அச்செயல் தானே தமக்கு இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம் வருவித்து உரைக்க.)
சாலமன் பாப்பையா
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
Meaning in English
If, ere the noontide, you to others evil do, Before the eventide will evil visit you





