Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 318

அறத்துப்பால்துறவறவியல்32. இன்னாசெய்யாமை

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல்.

tannuyirk kinnAmai tAnaRivAn enkolOmannuyirk kinnA seyal

S. A. Rajkumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறர் செய்யும் துன்பம் தன் உயிருக்கு எவ்வளவு கொடிய வேதனையைத் தரும் என்று அனுபவப்பூர்வமாக அறிந்த ஒருவன், அதே துன்பத்தை மற்ற உயிர்களுக்குச் செய்வது என்னே ஒரு அறியாமை!

• தன் உயிர்க்கு இன்னாமை = பிறர் தரும் துன்பமும் வலியும் தன் உயிருக்கு எவ்வளவு வேதனையானது என்பதை• தான் அறிவான் = தன் சொந்த அனுபவத்தால் உணர்ந்தறிந்த ஒருவன்,• மன் உயிர்க்கு = நிலைபெற்ற மற்ற உயிர்களுக்கும் மனிதர்களுக்கும்• இன்னா செயல் = அதே துன்பத்தை வலிந்து செய்வது• என் கொலோ = என்ன அறியாமையோ? (எந்தக் காரணத்தினால் அவன் அவ்வாறு செய்கிறான்?).

மு.வரதராசன்

தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

பரிமேலழகர்

தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - பிறர் செய்யும் இன்னாதன தன்னுயிர்க்கு இன்னாவாம் தன்மையை அனுபவித்து அறிகின்றவன்: மன் உயிர்க்கு இன்னா செயல்என் கொல் - நிலைபேறுடைய பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தான்? (இவ்வாறே இவை பிற உயிர்க்கும் இன்னா என்பது அனுமானத்தான் அறிந்து வைத்துச் செய்கின்ற இப்பாவம் கழுவப்படாமையின்,'இன்னாதான் யான் வருந்தப் பின்னே வந்து வருத்தும்' என்பது ஆகமத்தானும் அறிந்து ஒழியற்பாலன என்பது தோன்றத் 'தான்' என்றும் அத்தன்மையான் ஒழியாமைக்குக் காரணம் மயக்கம் என்பது தோன்ற 'என்கொலோ' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் பொதுவகையான் விலக்கப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?

Meaning in English

Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of man

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout