எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.
enaittAnum enjnjAnRum yArkkum manattAnAmmANAsey yAmai talai
V. U. M. Ayshwarya
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• எனைத்தானும் = எவ்வளவு சிறிய அளவினதாக இருந்தாலும்,• எஞ்ஞான்றும் = எக்காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும்,• யார்க்கும் = எத்தகைய மனிதர்களுக்கும் உயிர்களுக்கும்,• மனத்தான் ஆம் = மனதால் திட்டமிட்டு நினைத்துச் செய்யும்• மாணா செய்யாமை = இழிவான தீமைகளைச் செய்யாமல் வாழ்வதே• தலை = மனித ஒழுக்கத்தின் தலையாய முதன்மை அறமாகும்.எளிய விளக்கம்:எவ்வளவு சிறிதாக இருந்தாலும், எக்காலத்திலும், எவருக்குமே மனதால் எண்ணிச் செய்யும் இழிவான தீமைகளைச் செய்யாமல் தவிர்த்து வாழ்வதே மனித தர்மத்தின் தலையாய முதன்மை அறமாகும்.
மு.வரதராசன்
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
பரிமேலழகர்
மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.
Meaning in English
To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise





