Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 316

அறத்துப்பால்துறவறவியல்32. இன்னாசெய்யாமை

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்.

innA enattA nuNarntavai tunnAmaivENTum piRankaT seyal

Jeevareha Krishnaraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• இன்னா என = தனக்கு மிகுந்த வேதனையையும் துன்பத்தையும் தரும் செயல்கள் என்று• தான் உணர்ந்தவை = தன் சொந்த அனுபவத்தால் ஒருவன் உணர்ந்தறிந்தவற்றை,• பிறன்கண் செயல் = மற்றவர்கள் மீது செய்வதை• துன்னாமை வேண்டும் = ஒருபோதும் நெருங்க விடாமல் தவிர்த்து வாழ வேண்டும்.எளிய விளக்கம்:தனக்கு வேதனையையும் துன்பத்தையும் தரக்கூடியவை என்று தன் சொந்த அனுபவத்தால் ஒருவன் உணர்ந்த எச்செயலையும், அவன் மற்றவர்களுக்கு ஒருபோதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

மு.வரதராசன்

ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

பரிமேலழகர்

இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.)

சாலமன் பாப்பையா

தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

Meaning in English

What his own soul has felt as bitter pain, From making others feel should man abstain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout