Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 314

அறத்துப்பால்துறவறவியல்32. இன்னாசெய்யாமை

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.

innAsey tArai oRuttal avarnANanannayanj seytu viTal

Devan Ekambaram

பொருள் / உரை

முருகா எளிய உரை

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிக்கும் தலைசிறந்த வழி, அவர் தன் செயலை எண்ணி வெட்கித் தலைகுனியும்படி அவருக்கு நல்லுதவி செய்து, அவர் செய்த தீங்கையும் நாம் செய்த உதவியையும் அடியோடு மறந்துவிடுவதேயாகும்.

• இன்னா செய்தார் ஒறுத்தல் = நமக்குத் தீங்கு செய்த எதிரியைத் தண்டிக்கும் தலைசிறந்த முறையானது எதுவென்றால்,• அவர் நாண = தன் தவறை எண்ணி அவரே உள்ளூர வெட்கித் தலைகுனியுமாறு• நல் நயம் செய்து = அவருக்குத் தூய்மையான நல்லுதவிகளைச் செய்து,• விடல் = அவர் செய்த தீமையையும் நாம் செய்த உதவியையும் உள்ளத்திலிருந்து மறந்துவிடுவதேயாகும்.

மு.வரதராசன்

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

பரிமேலழகர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

Meaning in English

To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout