Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 312

அறத்துப்பால்துறவறவியல்32. இன்னாசெய்யாமை

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

kaRuttinnA seytavak kaNNum maRuttinnAseyyAmai mAsaRRAr kOL

Thila Laxshman

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன்மீது பகைமை கொண்டு ஒருவன் கொடிய துன்பங்களைச் செய்த போதிலும், அவனுக்குப் பதிலுக்குத் திரும்பத் துன்பம் செய்யாமல் இருப்பதே மனத்தூய்மை கொண்ட சான்றோர்களின் உயர்ந்த கொள்கையாகும்.

• கறுத்து = தன்மீது கடுமையான பகை மற்றும் பொறாமை கொண்டு• இன்னா செய்த அக்கண்ணும் = ஒருவன் கொடிய துன்பங்களைச் செய்த போதிலும்,• மறுத்து = பதிலுக்கு அவனுக்குப் பழிவாங்கும் நோக்குடன்• இன்னா செய்யாமை = எந்தத் தீமையையும் செய்யாமல் இருப்பதே• மாசு அற்றார் கோள் = குற்றமற்ற தூய சான்றோர்களின் உயர்ந்த கொள்கையாகும்.

மு.வரதராசன்

ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

பரிமேலழகர்

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

Meaning in English

Though malice work its worst, planning no ill return, to endure, And work no ill, is fixed decree of men in spirit pure

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout