இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.
iNareri tOyvanna innA seyinumpuNarin vekuLAmai nanRu
Gold Devaraj
பொருள் / உரை
முருகா எளிய உரை
பெருநெருப்பில் விழுந்து சுட்டெரிப்பது போன்ற தாங்க முடியாத கொடிய துன்பங்களை ஒருவன் நமக்குச் செய்த போதிலும், அவன் மீது கோபம் கொள்ளாமல் மனத்தை அடக்க முடிந்தால் அதுவே ஒருவனுக்கு மேலான நன்மையைத் தரும்.
• இணர் எரி = கொழுந்துவிட்டு எரியும் பெருநெருப்பில்• தோய்வு அன்ன = உடலைத் தூக்கிப் போட்டாற் போன்ற தாங்க முடியாத• இன்னா செயினும் = கொடிய துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்த போதிலும்,• புணரின் = மனம் பொருந்தி அவனிடம்• வெகுளாமை நன்று = கோபம் கொள்ளாமல் பொறுமையைக் காக்க முடிந்தால் அதுவே மிகச் சிறந்த நன்மையாகும்.
மு.வரதராசன்
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர்
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.
Meaning in English
Though men should work thee woe, like touch of tongues of fire 'Tis well if thou canst save thy soul from burning ire





