மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.
maRattal vekuLiyai yArmATTun tIyapiRattal atanAn varum
Mathurangky Srikantharasah
பொருள் / உரை
முருகா எளிய உரை
யாரிடத்திலும் கோபம் கொள்வதை அறவே மறந்துவிட வேண்டும்; ஏனெனில் மனித வாழ்க்கையில் துன்பங்களும் பாவங்களும் ஏற்படுவதற்குக் கோபம் ஒன்றே மூலகாரணமாக இருக்கிறது.
• யார் மாட்டும் = வலியவர், எளியவர், சமமானவர் என யாரிடத்திலும்• வெகுளியை மறத்தல் = கோபம் கொள்வதை அடியோடு மறந்துவிட்டு விட்டுவிட வேண்டும்;• தீய பிறத்தல் = மனிதனுக்கு நேரும் எல்லாவிதமான தீமைகளும் பழிகளும்• அதனான் வரும் = அந்தக் கோபத்தினால் மட்டுமே உண்டாகும்.
மு.வரதராசன்
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
பரிமேலழகர்
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
Meaning in English
If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget





