செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கா
selliTattuk kAppAn sinangkAppAn alliTattukkAkkinen kAvAkkA len
Tillak Pandurangan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• செல் இடத்து = தன் அதிகாரம் செல்லுபடியாகும் இடத்தில் (தன்னை விட எளியவர்களிடம்)• சினம் காப்பான் = கோபம் கொள்ளாமல் அடக்கிக் காப்பவனே• சினம் காப்பான் = உண்மையாகச் சினத்தை வென்ற சான்றோன் ஆவான்;• அல் இடத்து = தன் அதிகாரம் செல்லாத இடத்தில் (தன்னை விட வலியவர்களிடம்)• காக்கின் என் = பயத்தினால் கோபத்தை அடக்கினால் என்ன?• காவாக்கால் என் = அடக்காமல் வெளிப்படுத்தினால் தான் என்ன? (அங்கு அடக்குவது பெருமை ஆகாது).எளிய விளக்கம்:தன் அதிகாரம் பலிக்கும் எளியவர்களிடத்தில் கோபத்தை அடக்குபவனே மெய்யாகக் கோபத்தை வென்றவன் ஆவான்; அதிகாரம் பலிக்காத வலிமை மிக்கவர்களிடத்தில் அச்சத்தினால் கோபத்தை அடக்கினாலும் பயன் இல்லை, அடக்காவிட்டாலும் பயனில்லை.
மு.வரதராசன்
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?
பரிமேலழகர்
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்? ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?
Meaning in English
Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein





