யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.
yAmeyyAk kaNTavaRRu Lillai enaittonRumvAymaiyin nalla piRa
Ranjani Barath
பொருள் / உரை
முருகா எளிய உரை
நாங்கள் ஆராய்ந்து உணர்ந்த மெய்யியல் உண்மைகளுள், எவ்வகையிலும் வாய்மை என்னும் உண்மை நெறியை விட மிகச் சிறந்ததாகக் கூறத்தக்க வேறு எந்தவொரு அறமும் இந்த உலகத்தில் இல்லை.
• யாம் மெய்யாக் கண்டவற்றுள் = நாங்கள் ஆராய்ந்து உண்மையானவை என்று கண்டறிந்த மெய்யியல் நூல்கள் மற்றும் அறங்களுள்,• எனைத்து ஒன்றும் = எவ்வகையான சிறப்பாலும்• வாய்மையின் = வாய்மை என்னும் உண்மை ஒழுக்கத்தை விட• நல்ல பிற = மிகச் சிறந்ததாகக் கூறக்கூடிய வேறு எந்த அறமும்• இல்லை = இவ்வுலகில் இல்லவே இல்லை.
மு.வரதராசன்
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
பரிமேலழகர்
யாம் மெய்யாக் கண்டவற்றுள் - யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள், எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை - யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை. (மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.
Meaning in English
Of all good things we've scanned with studious care, There's nought that can with truthfulness compare





