Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 299

அறத்துப்பால்துறவறவியல்30. வாய்மை

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.

ellA viLakkum viLakkalla sAnROrkkuppoyyA viLakkE viLakku

Varshan

பொருள் / உரை

முருகா எளிய உரை

வெளி உலகத்தின் இருளைப் போக்கும் தீபங்கள் எல்லாம் உண்மையான விளக்குகள் ஆகா; சான்றோர்களுக்கு உள்ளத்தின் அறியாமை இருளைப் போக்கி ஒளிதரும் 'பொய் பேசாத வாய்மை' என்னும் விளக்கே உண்மையான மெய்விளக்காகும்.

• எல்லா விளக்கும் = வெளி உலகத்து இருளைப் போக்கும் தீபம், சூரியன் முதலான எந்த விளக்குகளும்• விளக்கு அல்ல = உண்மையான மெய்விளக்குகள் ஆகாது;• சான்றோர்க்கு = ஞானமும் ஒழுக்கமும் நிறைந்த சான்றோர்களுக்கு,• பொய்யா விளக்கே = உள்ளத்து அறியாமை இருளைப் போக்கும் 'பொய் பேசாத வாய்மை' என்னும் விளக்கே• விளக்கு = அணையாப் பேரொளி தரும் மெய்யான விளக்காகும்.

மு.வரதராசன்

(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

பரிமேலழகர்

எல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே - துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே. (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

Meaning in English

Every lamp is not a lamp in wise men's sight; That's the lamp with truth's pure radiance bright

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout