Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 295

அறத்துப்பால்துறவறவியல்30. வாய்மை

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.

manattoTu vAymai mozhiyin tavattoTutAnanjsey vArin talai

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்தி வாய்மையைப் பேசி வாழ்வானானால், அவன் உடலை வருத்தித் தவம் செய்வோர் மற்றும் பொருளை வாரி வழங்கும் தானம் செய்வோர் ஆகிய இருவரையும் விட உயர்ந்த தலைசிறந்த மனிதன் ஆவான்.

• மனத்தொடு = தன் உள்ளத்தோடு முழுமையாகப் பொருந்தி• வாய்மை மொழியின் = ஒருவன் எப்போதும் உண்மையை மட்டுமே பேசி வாழ்வானானால்,• தவத்தொடு தானம் செய்வாரின் = உடலை வருத்தித் தவம் செய்வோரையும், அள்ளிக் கொடுத்துத் தானம் செய்வோரையும் விட• தலை = அவன் மேலான உயர் நிலையை உடையவன் ஆவான்.

மு.வரதராசன்

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

பரிமேலழகர்

மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)

சாலமன் பாப்பையா

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

Meaning in English

Greater is he who speaks the truth with full consenting mind Than men whose lives have penitence and charity combined

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout