தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
tannenj saRivatu poyyaRka poyttapintannenjsE tannais suTum
Nithyasree Mahadevan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் மனசாட்சிக்கு உண்மை என்று தெரிந்த ஒன்றை எவரும் பொய் பேசி மறைக்கக் கூடாது; அப்படிப் பொய் பேசினால், அவனது சொந்த மனமே சாட்சியாக நின்று அவனைக் குற்ற உணர்வால் சுட்டெரிக்கும்.
• தன் நெஞ்சு அறிவது = தன் சொந்த மனசாட்சிக்கு உண்மை என்று தெரிந்த ஒரு விஷயத்தை• பொய்யற்க = பிறர் அறியவில்லை என்று பொய் பேசி மறைக்கக் கூடாது;• பொய்த்தபின் = அப்படிப் பொய் சொல்லிவிட்டால்,• தன் நெஞ்சே = அதை அறிந்த அவனது சொந்த மனசாட்சியே• தன்னைச் சுடும் = குற்ற உணர்வால் அவனை இரவு பகலாகச் சுட்டெரித்துத் துன்புறுத்தும்.
மு.வரதராசன்
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
பரிமேலழகர்
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் -பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்"(கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
Meaning in English
Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glows





