வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.
vAymai enappaTuva tiyAtenin yAtonRantImai yilAta solal
J. Deepalakshmi
பொருள் / உரை
முருகா எளிய உரை
உண்மை அல்லது வாய்மை என்பது எதுவென்றால், எந்தவொரு உயிருக்கும் சிறிதும் தீமை தராத நன்மையான சொற்களைப் பேசுவதே ஆகும்.
• வாய்மை எனப்படுவது = மெய்மை அல்லது வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படும் அறம்• யாது எனின் = எதுவென்று ஆராய்ந்து பார்த்தால்,• யாதொன்றும் = எந்தவொரு உயிருக்கும் எவ்விதத்திலும்• தீமை இலாத = சிறிதும் தீங்கு விளைவிக்காத நன்மையான சொற்களைப்• சொலல் = பேசுவதே ஆகும்.
மு.வரதராசன்
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
பரிமேலழகர்
வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
Meaning in English
You ask, in lips of men what 'truth' may be; 'Tis speech from every taint of evil free





