Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 287

அறத்துப்பால்துறவறவியல்29. கள்ளாமை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

kaLavennung kAraRi vANmai aLavennumARRal purintArka Nil

Anand V. S.

பொருள் / உரை

முருகா எளிய உரை

தர்ம நெறியையும் மெய்ப்பொருளையும் உணர்ந்து நேர்மையோடு வாழும் ஆன்ம வலிமை கொண்ட சான்றோர்களிடம், திருட்டு மற்றும் வஞ்சனைக்குக் காரணமான இருண்ட அறியாமை அறிவு ஒருபோதும் இருக்காது.

• களவு என்னும் = களவு செய்தற்குக் காரணமான• கார் அறிவு ஆண்மை = அறியாமை நிறைந்த இருண்ட மனப்பான்மையானது,• அளவு என்னும் = நீதி மற்றும் மெய்ப்பொருளை அளந்து அறியும்• ஆற்றல் புரிந்தார்கண் = ஆன்ம வலிமையை விரும்பும் ஞானியரிடத்தில்• இல் = ஒருபோதும் இருக்காது.

மு.வரதராசன்

களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

பரிமேலழகர்

களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

Meaning in English

Practice of fraud's dark cunning arts they shun, Who long for power by 'measured wisdom' won

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout