Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 286

அறத்துப்பால்துறவறவியல்29. கள்ளாமை

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.

aLavinkaN ninRozhuka lARRAr kaLavinkaNkanRiya kAta lavar

Haasini Battiprolu

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறர் பொருளை ஏமாற்றித் திருடும் பேராசை கொண்டவர்களால், நீதி மற்றும் நேர்மைக்குரிய நல்வழியின் எல்லைக்குள் நின்று ஒழுக்கமாக வாழ ஒருபோதும் முடியாது.

• களவின்கண் = பிறர் பொருளை ஏமாற்றித் திருடுவதில்• கன்றிய காதலவர் = அடங்காத தீவிர ஆசை கொண்டவர்கள்,• அளவின்கண் = நீதி, நேர்மை, தர்மத்தின் எல்லைக்குள்• நின்று ஒழுகல் = நிலையாக நின்று ஒழுக்கத்தோடு வாழ• ஆற்றார் = ஒருபோதும் இயலாதவர்கள் ஆவர்.

மு.வரதராசன்

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

பரிமேலழகர்

அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.)

சாலமன் பாப்பையா

உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

Meaning in English

They cannot walk restrained in wisdom's measured bound, In whom inveterate lust of fraudful gain is found

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout