Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 285

அறத்துப்பால்துறவறவியல்29. கள்ளாமை

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

aruLkaruti anpuTaiya rAtal poruLkarutippossAppup pArppArka Nil

Saakshi Shyam

பொருள் / உரை

முருகா எளிய உரை

அடுத்தவரின் பொருளைத் திருட எண்ணி, அவர் எப்போது கவனக்குறைவாக இருப்பார் என்று தருணம் பார்த்துக் காத்திருக்கும் வஞ்சகர்களிடம், எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டி அருளோடு வாழும் உயர்ந்த குணம் ஒருபோதும் இருக்காது.

• பொருள் கருதி = அடுத்தவரின் உடைமைகளை அபகரிக்க எண்ணி,• பொச்சாப்புப் பார்ப்பார்கண் = அவர் மறதியாய் அல்லது கவனக்குறைவாய் இருக்கும் நேரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் திருடர்களிடம்,• அருள் கருதி = உயிர்களிடத்தில் காட்டும் கருணையின் உயர்வை உணர்ந்து• அன்பு உடையர் ஆதல் = உண்மையான அன்போடு வாழும் உயர்பண்பு ஒருபோதும்• இல் = உண்டாகாது.

மு.வரதராசன்

அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

பரிமேலழகர்

அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது. (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

Meaning in English

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power, Who neighbour's goods desire, and watch for his unguarded hour

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout