Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 284

அறத்துப்பால்துறவறவியல்29. கள்ளாமை

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.

kaLavinkaN kanRiya kAtal viLaivinkaNvIyA vizhuman tarum

Bhobisha Pragan Shyam

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறர் பொருளை ஏமாற்றித் திருடுவதில் ஒருவனுக்கு உண்டாகும் அடங்காத பேராசையானது, தொடக்கத்தில் இன்பமாகத் தோன்றினாலும் அதன் பலன் விளையும் போது அவனுக்குத் தீராத நீங்காத பெருந்துன்பத்தையே தரும்.

• களவின்கண் = பிறர் பொருளை வஞ்சித்துக் களவு செய்வதில்• கன்றிய காதல் = ஒருவனுக்கு உண்டாகும் அளவுக்கதிகமான தீராத பேராசையானது,• விளைவின்கண் = அதன் இறுதிப் பயன் விளையும் காலத்தில்,• வீயா விழுமம் தரும் = எக்காலத்தும் அழியாத தீராத பெரும் துன்பங்களையே அவனுக்குக் கொடுக்கும்.

மு.வரதராசன்

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

பரிமேலழகர்

களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

Meaning in English

The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout