மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின்.
mazhittalum nITTalum vENTA ulakampazhitta tozhittu viTin
Ramanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சான்றோர்கள் பழித்து ஒதுக்கிய தீய செயல்களையும் ஒழுக்கக்கேடுகளையும் ஒருவன் தன் வாழ்க்கையில் இருந்து நீக்கிவிட்டாலே போதுமானது; அவனுக்குத் தலையை மொட்டை அடிப்பதோ அல்லது சடை வளர்ப்பதோ ஆகிய எந்தப் புறவேடங்களும் தேவையே இல்லை.
• உலகம் பழித்தது = சான்றோர்களும் உலக அறிஞர்களும் இழிவானது என்று பழித்து ஒதுக்கிய தீயொழுக்கங்களை• ஒழித்து விடின் = ஒருவன் தன் வாழ்விலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட்டால்,• மழித்தலும் = தலைமுடியை மொட்டையடித்துக் கொள்வதும்,• நீட்டலும் = சடாமுடியாய் நீளமாக வளர்த்துக் கொள்வதும் ஆகிய புறவேடங்கள்• வேண்டா = அவனுக்குத் தேவையே இல்லை.
மு.வரதராசன்
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
பரிமேலழகர்
மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.
Meaning in English
What's the worth of shaven head or tresses long, If you shun what all the world condemns as wrong





