மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்.
manattatu mAsAka mANTArnI rATimaRaintozhuku mAntar palar
Shravya Sudarshan Iyer
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனதில் வஞ்சகமும் தீய எண்ணங்களும் நிறைந்திருக்க, வெளியே தவத்தால் சிறந்த பெரியோரைப் போலப் புனித நதிகளில் மூழ்கி நீராடித் தங்களை உத்தமர்களாகக் காட்டிக்கொண்டு ஏமாற்றும் போலி மனிதர்கள் உலகில் பலராக உள்ளனர்.
• மனத்தது மாசு ஆக = உள்ளத்திலே ஆசை, கோபம், வஞ்சகம் போன்ற அழுக்குகள் நிறைந்திருக்க,• மாண்டார் நீர் ஆடி = தவத்தில் சிறந்த மேலோரைப் போலப் புனித நதிகளில் நீராடிக் காட்டி,• மறைந்து ஒழுகு மாந்தர் = தம் கபடத்தை மறைத்துக்கொண்டு வாழும் போலி மனிதர்கள்• பலர் = இவ்வுலகில் பலராய் இருக்கின்றனர்.
மு.வரதராசன்
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
பரிமேலழகர்
மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக, மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர். (மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.
Meaning in English
Many wash in hollowed waters, living lives of hidden shame; Foul in heart, yet high upraised of men in virtuous fame





