புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் கரியார் உடைத்து.
puRangkunRi kaNTanaiya rEnum akangkunRimUkkiR kariyA ruTaittu
Manjunath Rammohan
பொருள் / உரை
முருகா எளிய உரை
வெளித் தோற்றத்தில் குன்றிமணியின் அழகிய செந்நிறம் போலத் தூய்மையான நல்லவராய்க் காட்சியளித்தாலும், உள்ளத்தில் அக்குன்றிமணியின் முனை போல் கரிய தீய மனம் கொண்ட வஞ்சகர்களும் இவ்வுலகில் இருக்கவே செய்கிறார்கள்.
• புறம் குன்றி கண்டு அனையரேனும் = வெளித்தோற்றத்தில் குன்றிமணியின் மேனி போலச் செம்மையாகவும் தூய்மையாகவும் காட்சியளித்தாலும்,• அகம் = உள்ளத்திலோ• குன்றி மூக்கின் = அந்தக் குன்றிமணியின் மூக்கு முனை போல• கரியார் = கரிய இருள் மனமும் வஞ்சகமும் கொண்ட போலி மனிதர்களை• உடைத்து = இந்த உலகம் தன்னுள் கொண்டிருக்கிறது.
மு.வரதராசன்
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
பரிமேலழகர்
குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினும், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம் ('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும் அது.)
சாலமன் பாப்பையா
குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.
Meaning in English
Outward, they shine as 'kunri' berry's scarlet bright; Inward, like tip of 'kunri' bead, as black as night





