Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 270

அறத்துப்பால்துறவறவியல்27. தவம்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.

ilarpala rAkiya kAraNam nORpArsilarpalar nOlA tavar

S. P. Abhishek

பொருள் / உரை

முருகா எளிய உரை

பலமும் மெய்யறிவும் அற்ற பலவீனமான மனிதர்கள் உலகில் பலராக இருப்பதற்குக் காரணம், மனக்கட்டுப்பாட்டோடு தவம் செய்பவர்கள் மிகச் சிலராக இருப்பதும், அத்தகைய தவத்தை மேற்கொள்ளாமல் வாழ்பவர்கள் பெரும்பான்மையாக இருப்பதுமே ஆகும்.

• இலர் பலர் ஆகிய காரணம் = ஆற்றலும் மெய்யறிவும் அற்ற வறியவர்கள் உலகில் பலராக இருப்பதன் காரணம் யாதெனில்,• நோற்பார் சிலர் = மனக்கட்டுப்பாட்டுடன் தவம் செய்பவர்கள் மிகச் சிலரே ஆவர்;• பலர் நோலாதவர் = அத்தகைய தவநெறியைப் பின்பற்றாமல் புலன் இச்சைகளில் வீழ்ந்து கிடப்பவர்களோ பலராய் இருப்பதே ஆகும்.

மு.வரதராசன்

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

பரிமேலழகர்

இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை,அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர'் எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.

Meaning in English

The many all things lack! The cause is plain, The 'penitents' are few The many shun such pain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout