கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
kURRang kutittalung kaikUTum nORRalinARRal talaippaT Tavarkku
Charumathy Nagarajan & Dr. J. Shivashankari
பொருள் / உரை
முருகா எளிய உரை
தவத்தினால் உண்டாகும் உயர்ந்த ஆற்றலையும் மெய்ஞ்ஞானத்தையும் அடைந்த தவசியர்க்கு, மரணத்தையும்கூட வெல்லுதல் எளிதில் கைகூடும்.
• நோற்றலின் = முறையான தவத்தை மேற்கொள்வதால் விளையக்கூடிய• ஆற்றல் தலைப்பட்டவர்க்கு = பேரறிவும் ஆற்றலும் பெற்ற ஞானியர்க்கு,• கூற்றம் குதித்தலும் = மரணத்தை (எமனை) வென்று கடந்து நிற்பதும் கூட• கைகூடும் = எளிதாகக் கைகூடும் செயலாகும்.
மு.வரதராசன்
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
பரிமேலழகர்
கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
Meaning in English
E'en over death the victory he may gain, If power by penance won his soul obtain





