தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.
tannuyir tAnaRap peRRAnai Enaiyamannuyi rellAn tozhum
Antony Dassan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தவத்தின் வலிமையால் 'நான்', 'எனது' என்கின்ற அகந்தையை முழுமையாக ஒழித்துத் தன் உயிரைத் தன் வசப்படுத்திய ஞானியை, உலகிலுள்ள மற்ற எல்லா உயிர்களும் போற்றி வணங்கும்.
• தன் உயிர் = தன்னுடைய உயிரை• தான் அறப் பெற்றானை = 'நான்', 'எனது' என்ற அகந்தை முற்றிலும் நீங்கித் தனக்கு உரியதாக முழுமையாக வென்று பெற்ற ஞானியை,• ஏனைய மன் உயிர் எல்லாம் = இவ்வுலகிலுள்ள மற்ற எல்லா உயிர்களும்• தொழும் = தலைவணங்கிக் கைகூப்பித் தொழும்.
மு.வரதராசன்
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
பரிமேலழகர்
தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.)
சாலமன் பாப்பையா
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
Meaning in English
Who gains himself in utter self-control, Him worships every other living soul





