Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 267

அறத்துப்பால்துறவறவியல்27. தவம்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

suTassuTarum ponpOl oLiviTun tunpanjsuTassuTa nORkiR pavarkku

Vrusha Balu

பொருள் / உரை

முருகா எளிய உரை

நெருப்பில் இட்டுச் சுடச்சுடத் தன் களிம்புகள் நீங்கிப் பொன்னானது ஒளிவீசிப் பிரகாசிப்பது போல, தவநெறியில் நிற்பவர்களுக்குத் துன்பங்களும் சோதனைகளும் வர வர, அவர்களின் பாவக் கறைகள் நீங்கி மெய்ஞ்ஞான ஒளி மேன்மேலும் பிரகாசிக்கும்.

• சுடச் சுடரும் பொன் போல் = தீயில் இட்டுப் புடமிடச் சுடச்சுட மாசு நீங்கிப் பிரகாசிக்கும் தங்கம் போல,• நோற்கிற்பவர்க்கு = தவநெறியைப் பொறுமையோடு மேற்கொள்பவர்களுக்கு,• துன்பம் சுடச் சுட = சோதனைகளும் துன்பங்களும் அவர்களை வருத்த வருத்த,• ஒளி விடும் = அவர்களின் ஞானமும் பேரொளியும் மேன்மேலும் பெருகி விளங்கும்.

மு.வரதராசன்

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்

பரிமேலழகர்

சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளிவிடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)

சாலமன் பாப்பையா

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

Meaning in English

The hotter glows the fining fire, the gold the brighter shines; The pain of penitence, like fire, the soul of man refines

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout