Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 265

அறத்துப்பால்துறவறவியல்27. தவம்

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.

vENTiya vENTiyAng keytalAl seytavamINTu muyalap paTum

Aparna Narayanan

பொருள் / உரை

முருகா எளிய உரை

தவத்தை முறையாகச் செய்வதன் மூலம் ஒருவன் தான் விரும்பிய உயர்ந்த நன்மைகளை விரும்பியபடியே அடைந்துவிட முடியும் என்பதால், அறிவுடைய சான்றோர்கள் இப்பூவுலக வாழ்க்கையிலேயே தவத்தை ஊக்கத்தோடு முயன்று மேற்கொள்வார்கள்.

• வேண்டிய = தான் விரும்பிய உயர்ந்த நற்பயன்களை• வேண்டியாங்கு எய்தலால் = தான் விரும்பியபடியே தவறாமல் அடைய முடிவதால்,• செய் தவம் = அறிவுடையோரால் செய்யப்பட வேண்டிய தவமானது• ஈண்டு = இப்பூவுலகிலேயே (இப்பிறவியிலேயே)• முயலப்படும் = முனைப்புடன் முயன்று செய்யப்படுவதாகும்.

மு.வரதராசன்

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

பரிமேலழகர்

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

Meaning in English

That what they wish may, as they wish, be won, By men on earth are works of painful 'penance' done

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout