Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 263

அறத்துப்பால்துறவறவியல்27. தவம்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம்.

tuRantArkkut tuppuravu vENTi maRantArkonmaRRai yavarkaL tavam

Reema

பொருள் / உரை

முருகா எளிய உரை

துறவிகளுக்கு உணவு, உடை முதலான வசதிகளைச் செய்து தருவதிலேயே மூழ்கிவிட்ட உலக மக்கள், தாங்களும் மன அடக்கத்தோடு சுயமாகச் செய்ய வேண்டிய தவ ஒழுக்கத்தை மறந்துவிட்டார்களோ என்று வியக்கத் தோன்றுகிறது; ஏனெனில் பிறருக்குச் செய்யும் உதவியை விடத் தன் மனதைத் தவத்தால் வெல்வதே மேலானது.

• மற்றையவர்கள் = உலக ஆசைகளில் உழலும் இல்லறத்தவர்கள்• துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி = பற்றற்ற துறவிகளுக்கு உணவு, உடை போன்ற வசதிகளைச் செய்து தருவதில் மட்டும் ஈடுபட்டு,• தவம் மறந்தார்கொல் = தாங்களும் சுயமாகச் செய்ய வேண்டிய தவம் என்னும் சுய ஒழுக்கத்தை மறந்துவிட்டார்களோ?

மு.வரதராசன்

துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ

பரிமேலழகர்

மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)

சாலமன் பாப்பையா

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

Meaning in English

Have other men forgotten 'penitence' who strive To earn for penitents the things by which they live

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout