Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 261

அறத்துப்பால்துறவறவியல்27. தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.

uRRanOy nOnRal uyirkkuRukaN seyyAmaiaRRE tavattiR kuru

Tulasi Ramachandran

பொருள் / உரை

முருகா எளிய உரை

தனக்கு வரும் துன்பங்களையும் வழிகளையும் பொறுமையோடு தாங்கிக்கொள்வதும், அதே நேரத்தில் எந்தவொரு உயிருக்கும் தான் துன்பம் தராமல் வாழ்வதும் ஆகிய இவ்விரண்டு பண்புகளே மெய்யான தவத்தின் இலக்கணமாகும்.

• உற்ற நோய் நோன்றல் = தனக்கு நேரும் பசி, பிணி மற்றும் பிறர் தரும் துன்பங்களைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்வதும்,• உயிர்க்கு உறுகண் செய்யாமை = எந்தவொரு உயிருக்கும் தான் சிறிதும் துன்பம் செய்யாமல் இருப்பதும்,• அற்றே = ஆகிய இவ்விரண்டு பண்புகளே• தவத்திற்கு உரு = தவம் என்பதன் உண்மையான உருவமும் இலக்கணமுமாகும்.

மு.வரதராசன்

தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்

பரிமேலழகர்

தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.

Meaning in English

To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout