செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.
seyaRkariya seyvAr periyar siRiyarseyaRkariya seykalA tAr
Aishwarya Ravichandran
பொருள் / உரை
முருகா எளிய உரை
செய்யவும் முடியா தவற்றைச் செய்வோர்!மேன்மக்கள் ஆவர் அவரே பெரியோர்!அத்தகு செயல் செய்ய இயலாதோர்!எளியோர் ஆவர் அவரே சிறியோர்!
• செயற்கு அரிய செய்வார் = மற்ற மனிதர்களால் செய்வதற்கு முடியாத மிகக் கடினமான தியாகங்களையும் அறச் செயல்களையும் செய்து முடிப்பவரே• பெரியர் = உயர்ந்த சான்றோர் (பெரியோர்) ஆவர்;• செயற்கு அரிய செய்கலாதார் = அத்தகைய அரிய செயல்களைச் செய்ய முடியாமல் எளிய ஆசைகளில் வீழ்பவரே• சிறியர் = அற்பமான சிறியோர் ஆவர்.
மு.வரதராசன்
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
பரிமேலழகர்
செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.)
சாலமன் பாப்பையா
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
Meaning in English
Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschew





