ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி.
aintavittAn ARRal akalvisumpu LArkOmAnintiranE sAlung kari
Malathy Lakshman
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஐம்புலன் ஆசை முற்றிலும் ஞானி வென்றான்!இந்திரனும் புலனிலே தவறினான்!ஞானியவன் ஆற்றல் எல்லையற் றதுவே!இந்திரன் நிலையே தகும் சான்றதுவே!
• ஐந்து அவித்தான் ஆற்றல் = மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களின் ஆசைகளையும் அடக்கி வென்ற ஞானியின் பேராற்றலுக்கு,• அகல் விசும்புளார் கோமான் = அகன்ற வானுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனாகிய• இந்திரனே = இந்திரனே• சாலும் கரி = போதுமான சான்றாக (சாட்சியாக) விளங்குகிறான்.
மு.வரதராசன்
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
பரிமேலழகர்
ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.
சாலமன் பாப்பையா
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்
Meaning in English
Their might who have destroyed 'the five', shall soothly tell Indra, the lord of those in heaven's wide realms that dwell





