உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
uranennun tOTTiyAn Oraintum kAppAnvaranennum vaippiRkOr vittu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
உறுதியெனும் கூரிய அங்குசத்தான்!ஐம்புலனாம் யானையை அடக்கிக் காப்பான்!மேலான வீட்டுலகில் அவன் முளைக்கும்!ஒப்பற்ற நல்விதையாய் அங்கு விளங்கும்!
• உரன் என்னும் தோட்டியான் = மன உறுதி மற்றும் மெய்யறிவு என்னும் கூரிய அங்குசத்தைக் கொண்டு,• ஓர் ஐந்தும் காப்பான் = மதம் பிடித்த யானை போன்ற ஐம்பொறிகளையும் தவறான வழியில் செல்லாமல் அடக்கிக் காப்பவன்,• வரன் என்னும் வைப்பிற்கு = எல்லாவற்றிலும் மேலான மோட்ச உலகம் என்னும் நிலத்திற்கு• ஓர் வித்து = முளைத்து விளங்கும் ஒப்பற்ற நல்விதையாவான்.
Murugaa simple commentary
With the sharp goad called determination!He will restrain and guard the elephant of the five senses!In the supreme world of liberation, he will sprout!As an incomparable good seed, he will shine there!
• With the goad called strength = Using the sharp goad called mental resolve and true wisdom,• One who guards the five = One who restrains and guards the five sense organs, like an elephant in rut, from going in the wrong path,• For the realm called supreme = For the land called the world of liberation, which is superior to everything• A single seed = He will become an incomparable good seed that sprouts and shines.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்
பரிமேலழகர்
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)
Parimelazhagar
He who guards the five with the goad called strength, he who guards the five elephants, which are the sense organs, from going towards their respective sense objects with the goad called firmness; is a seed for the land called the supreme, he is a seed for the land of liberation, which is said to be superior to all lands. (This is a partial metaphor. Firmness here refers to wisdom. Because he goes to that land and sprouts, he called him 'a seed'. The meaning is that he is not a man who is born and dies here.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்
Meaning in English
He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains

