அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.
avisorin tAyiram vETTalin onRanuyirsekut tuNNAmai nanRu
திருக்குறள் 259: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
தீயில் நெய்யினை ஊற்றி ஆயிரம்வேள்விகள் செய்து முடிப்பதை விட!ஓர்உயிரைக் கொல்லாமல் ஊனைத் தின்னாமல்வாழ்வதே யாவர்க்கும் மாபெரும் நன்மையாகும்!
• அவி சொரிந்து = நெய் முதலான நைவேத்தியப் பொருட்களைத் தீயில் இட்டு• ஆயிரம் வேட்டலின் = ஆயிரம் வேள்விகளை (யாகங்களை) செய்வதைக் காட்டிலும்,• ஒன்றன் உயிர் செகுத்து = ஒரு பிராணியின் உயிரைப் போக்கி• உண்ணாமை நன்று = அதன் உடலை உண்ணாமல் விரதம் காப்பதே எவ்வளவோ மேலானது.
மு.வரதராசன்
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர்
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.)
சாலமன் பாப்பையா
(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
Meaning in English
Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share





