செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
seyirin talaippirinta kATsiyA ruNNAruyirin talaippirinta Un
திருக்குறள் 258: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
குற்றமில்லாத மெய்யறிவு பெற்றவர்!குறையற்ற தூய ஞானம் கொண்டவர்!உயிரைப் பிரித்த பிணத்தின் மாமிசம்ஒருபோதும் உண்ணவே மாட்டார்கள்!
• செயிரின் தலைப்பிரிந்த = மயக்கமும் அறியாமையுமாகிய குற்றங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட• காட்சியார் = தூய மெய்யறிவு உடைய சான்றோர்கள்,• உயிரின் தலைப்பிரிந்த = ஓர் உடலிலிருந்து அதன் உயிர் பிரிக்கப்பட்டுப் பிணமாகிப்போன• ஊன் உண்ணார் = அந்த மாமிசத்தை ஒருபோதும் உணவாக உண்ண மாட்டார்கள்.
மு.வரதராசன்
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
பரிமேலழகர்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)
சாலமன் பாப்பையா
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
Meaning in English
Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave





