Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 257

அறத்துப்பால்துறவறவியல்26. புலான்மறுத்தல்

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ணது உணர்வார்ப் பெறின்.

uNNAmai vENTum pulAal piRitonRanpuNNa tuNarvArp peRin

திருக்குறள் 257: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

மற்றோர் உயிரின் உடலைக் கிழித்தரத்தம் வடியும் புண்ணே மாமிசம்!உண்மை நிலையை உணர்ந்தார் என்றால்ஒருபோதும் புலால் உண்ண மாட்டார்!

• புலால் = மாமிசம் என்பது• பிறிதொன்றன் புண் = மற்றொரு உயிரினுடைய உடலின் வெட்டுண்ட ரத்தப் புண்ணாகும்;• அது உணர்வார்ப் பெறின் = அந்த உண்மை நிலையை உணர்ந்து அறியும் விவேகம் பெற்றால்,• உண்ணாமை வேண்டும் = எவரும் அந்த அருவருப்பான புலாலை உண்ணாமல் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்.

மு.வரதராசன்

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.

பரிமேலழகர்

புலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.

Meaning in English

With other beings' ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely cease

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout