Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 256

அறத்துப்பால்துறவறவியல்26. புலான்மறுத்தல்

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

tinaRporuTTAl kollA tulakenin yArumvilaipporuTTAl UnRaruvA ril

திருக்குறள் 256: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

உண்ணும் நோக்கோடு உயிரைக் கொன்றுஊனைத் தின்பவர் இல்லை என்றால்!எண்ணும் காசுக்கு மாமிசம் விற்கும்எவரும் உலகினில் இருப்பதில்லை!

• உலகு = உலகத்திலுள்ள மனிதர்கள்• தினற்பொருட்டால் = தின்பதற்காக• கொல்லாது எனின் = உயிர்களைக் கொன்று புலாலை உண்ணாதிருப்பார்கள் என்றால்,• யாரும் = உலகில் எவருமே• விலைப்பொருட்டால் = பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில்• ஊன் தருவார் இல் = உயிர்களைக் கொன்று இறைச்சியை விற்க முன்வர மாட்டார்கள்.

மு.வரதராசன்

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

பரிமேலழகர்

தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும்இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

Meaning in English

'We eat the slain,' you say, by us no living creatures die; Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout