உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு.
uNNAmai yuLLa tuyirnilai UnuNNaaNNAttal seyyA taLaRu
திருக்குறள் 255: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
உயிர்களைக் காப்பது உண்ணாமை அறம்!உலகினில் நிலைப்பது உண்ணாமை அறம்!ஊனைத் தின்பவனை விழுங்கும் நரகம்!ஒருபோதும் வாயைத் திறக்காது நரகம்!
• உயிர்நிலை = உலகில் பிற உயிர்கள் பாதுகாப்பாக உயிர்வாழ்ந்து பெருகும் நிலைமை• உண்ணாமை உள்ளது = மனிதர்கள் மாமிசம் உண்ணாமல் வாழும் அறத்தின் மீதுதான் நிற்கிறது;• ஊன் உண்ண = அந்த நிலையை மீறி ஒருவன் புலால் உண்டால்,• அளறு = அவனை விழுங்கிக்கொண்ட நரகமானது• அண்ணாத்தல் செய்யாது = அவனை வெளியே உமிழ்ந்து விடுவிக்கத் தன் வாயைத் திறக்கவே திறக்காது.
மு.வரதராசன்
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
பரிமேலழகர்
உயிர் நிலை உண்ணாமை உள்ளது - ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது. (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
Meaning in English
If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again





